முக்கியச் செய்திகள் குற்றம்

திண்டிவனம் அருகே வீடு வீடாக புகுந்து கொள்ளையடித்த கும்பல்

திண்டிவனம் அருகே வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கே நகை, பணம் இல்லாததால் மற்றொரு வீட்டில் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆவணிப்பூர் பகுதியில் வசிப்பவர்கள், பக்கத்து ஊரில் திருவிழா என்பதற்காக தெரு கூத்து பார்பதற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள், முதலில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திருட முயன்று உள்ளனர். ஆனால் அந்த வீட்டில் பணம், நகை எதுவும் இல்லாத காரணத்தினால், அதே பகுதியில் உள்ள பூமாதேவிக்கு சொந்தமான வீட்டில் புகுந்துள்ளனர். அங்கு இரண்டு பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் தெருக்கூத்து முடிந்து வீட்டுக்கு வந்த பூமாதேவி வீடு அலங்கோலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது வீட்டில் நகை, பணம் திருடு போனதை அறிந்த பூமாதேவி உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் இது போல் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் காவல் துறையினர் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Advertisement:

Related posts

பக்தர்களின் வசதிக்காக திருத்தணி முருகன் கோயிலில் விரைவில் ரோப்கார்; சேகர்பாபு

Saravana Kumar

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் இணையும் யோகி பாபு

Halley karthi

கொரோனா தடுப்பூசி : சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது

Niruban Chakkaaravarthi