முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதை கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரி நீர் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி யினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடக அரசு தமிழகத்தில் செயல்படுத்த உள்ள காவிரி, வைகை, குண்டாறு இணைப் புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதையடுத்து, கர்நாடக அரசை கண்டித்தும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டமானது வெள்ளப்பெருக்கு காலகட்டத்தில் காவிரி டெல்டா பகுதியில் விவசாய நிலங்கள் மூழ்காமல் இருக்கவும் வீணாக செல்லும் தண்ணீரை திருப்பி வறட்சி
மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆனால், வேண்டுமென்றே கர்நாடக அரசு இந்த திட்டத்தை முடக்கும் விதமாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று
கூறி, இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரி நீர் குழு சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்ப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement:
SHARE

Related posts

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து இன்று ஆர்.டி.ஓ விசாரணை!

Jeba Arul Robinson

சென்னை ஐஐடியில் மாணவர் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு!

Vandhana

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவேன்- வீரசக்தி!

Saravana Kumar