முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக கூட்டணியில் திடீரென தொகுதி கைமாறியது ஏன்? மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இபிஎஸ் தரப்பினர் போட்டியிடுவதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க விரும்புகிறார் என மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

” எடப்பாடி பழனிச்சாமி ஜிகே.வாசனை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் கூட்டனி கட்சிகளுக்காக பாடுபட வேண்டும் என சொன்ன போதே தாமக  போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத்தான் அறிய முடிந்தது.  கடந்த முறை தாமக வேட்பாளர் தான் அந்த தொகுதியில் போட்டியிட்டார்.

தாமக கடந்த தேர்தலில் அதிமுக வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்கள். ஆனால் இம்முறை ஓபிஎஸ் மற்றும் இடையே நடைபெறும் மோதலால் இரட்டை இலை சின்னம் ஒரு பிரச்சனையாக மாறும். அதனால்தான் ஜிகே வாசன் இடைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி பிளவுபட்டுள்ளது. இடைத் தேர்தலில் ஈபிஎஸ் க்கு தான் கொங்கு பகுதியில் செல்வாக்கு உள்ளது. எனவே ஈபிஎஸ் தரப்பு தங்களது செல்வாக்கை நிரூபிப்பதற்காக இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தாலும் அவர்களுக்கும் இந்த சின்ன பிரச்சனை உள்ளது.

ஏனெனில் தேர்தல் கமிஷனின் விதிகள் படி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போட்டால்தான் இரட்டை இலை சின்னம் அதிமுக விற்கு கிடைக்கும்.
இல்லையெனில் இபிஎஸ் தரப்பு தனியாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அதிமுக பின்னடைவைத் தான் சந்திக்கும்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்  தரப்பின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பாஜக வும் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை பாஜக தனித்து போட்டியிட்டால் கூட திமுக கூட்டனிக்கு எதிராக எதிர்கட்சி போன்ற பிம்பத்தை உருவாக்கும் . எனவே அதற்கு  கொடுத்து விடக் கூடாது என இபிஎஸ் தரப்பு நினைக்கிறது.

ஓபிஎஸ் தரப்பினரை இபிஎஸ் தரப்பு சமாதானப்படுத்தி சின்னம் பிரச்சனையை சமாளித்து தேர்தலை எதிர்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கட்சி தன்னிடம் உள்ளது மற்றும் இபிஎஸ் தரப்புக்கே கட்சியில்  செல்வாக்கை  உள்ளது எனபதை நிரூபிப்பதற்கான தேர்தலாகவும் இது பார்க்கப்படுகிறது. மேலும் பல திருப்பங்களை நிகழ வாய்ப்பிருக்கிறது. அவற்றை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ” என பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்

EZHILARASAN D

’ஒமிக்ரானில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’:பிரதீப் கவுர்

Halley Karthik

நேபாளத்தில் பொதுத்தேர்தல் : உற்று நோக்கும் அண்டை நாடுகள்

EZHILARASAN D