மாணவர்கள் படிப்பிலும் தூக்கத்திலும் கவனம் செலுத்த ’கொயட் மோட்’ அப்டேட்டை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்டாவின் இன்ஸ்டாகிராம் அதன் நேர மேலாண்மை கருவிகள் பகுதியை விரிவுபடுத்தும் முயற்சியில் “கொயட் மோட்” என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் பயனர்களை இணையத்தில் அதிக நேரம் செகவழிக்காமல் அவர்களை ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.
மேலும், படிக்க, தூங்க அல்லது அவர்களின் மற்ற வேளைகளை செய்ய அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அப்டேட் வழிவகை செய்கிறது. போஸ்ட் நோட்டிபிகேஷன்களை நிறுத்துவைத்தல், குறுஞ்செய்திகளுக்குத் தானாகப் பதிலளிப்பது மற்றும் நீங்கள் தற்போது ஆன்கலைனில் இல்லை என்பதை நண்பர்களுக்குத் தெரிவிக்க இந்த ‘கொயட் மோட்’ உதவுகிறது.
இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிலிருந்து, நேரத்தை ஒதுக்குவது குறித்த பயனர்களின் கவலையைக் குறைப்பதே இந்த அப்டேட்டின் நோக்கமாகும். மேலும் இன்ஸ்டாகிராம் கொயட் மோடை நிறுத்திய பின் பயனர்கள் தாங்கள் தவறவிட்ட அனைத்து செய்திகளையும் ஒரு அறிக்கையாகக் கிடைக்கும் வகையில் இந்த அப்டேட் வழிவகை செய்துள்ளது.