முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா – வெளியான புகைப்படங்கள்

இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா நதியில்  சீனா அணை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சீன எல்லையில் தொடங்கி இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாக பிரம்மபுத்திரா ( சீன பெயர் – யார்லாங் ஜாக்போ) வழியாக பாய்ந்து வருகிறது. திபெத்தில்  இருந்து பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு திட்டமிட்டது. அப்போது  சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. 14-வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டும் திட்டம் இருப்பதாக அப்போது சீனா கூறியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, நேபாளம் ஆகிய இரண்டு நாடுகள் எல்லைகள் பகிர்ந்து கொள்ளும் ‘லைன் ஆப் கண்ட்ரோல்’ பகுதிக்கு அருகே இந்த அணை கட்டப்படுவது புகைப்படங்கள் மூலம் தெரியவருகிறது. இந்த அணையின் மூலம் இரண்டு விதமான பயன்களை சீனா பெறமுடியும் என்று கூறப்படுகிறது.  கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தில் உள்ள கிராமங்கள் வளர்ச்சியடையும், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிக்கு பயன்படுத்த முடியும் என இரண்டு பயன்களை பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

சீனா அனை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்களை  இண்டெல் ஆய்வகத்தின் புவிசார் நுண்ணறிவு ஆய்வாளர் டேமியன் சைமோன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ”இந்திய எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை அமைக்கப்பட்டுவருகிறது.  அணையின் நீளம் 350 மீட்டரிலிருந்து 400 மீட்டர் வரை இருக்கக்கூடும். தற்போது கட்டப்பட்டு வருவது இந்த படங்கள் மூலம் தெரிகிறது” என சைமோன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை குறித்து பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி!

Halley Karthik

கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் தடுப்பூசி! உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!!

EZHILARASAN D

தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் விநாயகர் சிலை – இந்து முன்னணி பேட்டி

Halley Karthik