எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதியை, அமைச்சராவதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் இந்த அவசரம் என்பது தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது 60வது பிறந்தநாளை தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில், தனது கட்சி நிர்வாகிகளுடன் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திமுக என்ற தீய சக்தியை விரட்ட வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த திமுகவை, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வருங்கால தேர்தல்களின் மூலம் வீழ்த்த வேண்டும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்பது எதார்த்தமான உண்மை. நம்முடன் கூட்டணி கட்சிகள் இணைந்து போரிட்டால் தான் வெற்றி பெற முடியும்.
திமுகவில் எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி, நாளை அமைச்சர் ஆகிறார். ஸ்டாலினுக்கு ஏன் அவசரம் என்று தெரியவில்லை. அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால், இதில் ஏதோ அவசரம் தெரிகிறது. அதை காலம் தான் உணர்த்தும். தேர்தலில் வாக்குறுதி
கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது தான் திமுக.
பழனிசாமி கம்பெனியை எதிர்த்த மக்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத திமுக வந்தால் நன்றாக இருக்கும் என வாக்களித்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள். புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.