சேப்பாக்கம் உதயநிதியாக இருந்தாலும் என் நண்பன் உதயநிதியாக இருந்தாலும் ஒரு நண்பனாக என் வாழ்த்துக்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கெண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,
சேப்பாக்கம் உதயநிதியாக இருந்தாலும் என் நண்பன் உதயநிதியாக இருந்தாலும் ஒரு
நண்பனாக என் வாழ்த்துக்கள். பெருமையாக இருக்கிறது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். இதற்கு
முன்பாக அனைத்து மாவட்ட கழக உறுப்பினர்களும் தீர்மானம் செய்து அவருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது தலைவர் சொன்னது ஒன்றுதான் முதலில் அவர் தமிழ்நாடு முழுக்க சுற்றி வந்து அவரது உழைப்பை காட்டட்டும் என்றார்.
அதே போல், 2021 இல் தமிழ்நாடு முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்த போது உங்களால் கிடைத்த வெற்றி என்று நாங்கள் சொன்னோம். அதற்கு அவர் இது என்னால் இல்லை கழக உடன்பிறப்புகளால், தலைவரால், பொதுமக்களால் கிடைத்தது என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தார். அவருக்கு இப்போது இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல் எந்த வேலையாக இருந்தாலும் எப்படி கவனத்துடன் செய்வாரோ அதுபோன்று தான் எடுத்துக் கொள்ளும் இந்த துறையிலும் செயல்படுவார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
எதிர்க்கட்சிகள் என்ன பாராட்டவா போகிறார்கள். இன்று அவருக்கு அமைச்சர் பதவி அளித்தாலும் சரி 30 ஆண்டுகளுக்கு அடித்து அளித்தாலும் சரி விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். ஏற்கனவே இளைஞரணி பொறுப்பு அளித்த போது விமர்சனம் வந்தது அப்போது நான் செயலில் செய்து காட்டுவேன் என்று தெரிவித்தார். அது போல் அமைச்சராகவும் தன்னை நிரூபிப்பார் கூறினார்.
மாநிலக் கல்விக் கொள்கை சார்ந்து அனைவரின் கருத்தையும் கேட்ட பின்னர் அனைவரின் கருத்தையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது கட்டாயம். ஆனால் மாநிலத்திற்கு என்ன தேவையோ அது மாநில கல்விக் கொள்கையில் இருக்கும். முடிவெடுக்க வேண்டியது முதலமைச்சர். நம் மாநிலத்திற்கு என்ன தேவையோ அதை உள்ளடக்கியதாக மாநில கல்விகொள்கை இருக்கும் என்றார்.