எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொத்து வரி உயர்வை கண்டித்த மு.க.ஸ்டாலின், இப்போது சொத்து வரியை உயர்த்தியது ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்கள் சார்பில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கடந்த ஆட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சொத்து வரியா? சொத்தை பறிக்கின்ற வரியா? என விமர்சித்ததை சுட்டிக்காட்டினார்.
அண்மைச் செய்தி: நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
கொரோனா தொற்று தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீண்டு வரும் நிலையில் சொத்துவரி உயர்த்தி இருப்பது நியாயம் அல்ல என்றும் அவர் கூறினார். மேலும், சித்தமல்லி பகுதியில் ரேஷன் கடையில் தரமில்லாத காலாவதியான பொருளை வாங்கிப் பயன்படுத்திய பொதுமக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








