தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்ட பொதுமக்கள், வனத்துறை பலமுறை முயற்சி செய்தும் காட்டுக்குள் செல்லாமல் வயல்வெளியில் முகாமிட்டிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள சொக்கம்பட்டி பகுதியில் 12 காட்டு யானைகள் அடங்கிய யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த கடந்த 8 ஆம் தேதி முதல் தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்குள் யானைகள் சுற்றித்திரிகின்றன. யானைக் கூட்டத்தை வனப்பகுதிகளுக்குள் விரட்ட பொதுமக்களுடன் இணைந்து வெடி வெடித்தும், சத்தங்களை எழுப்பியும் வனத்துறையினர் முயற்சி செய்தனர்.
அண்மைச் செய்தி: ‘சொத்து வரியை உயர்த்தியது ஏன்’ – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி
ஆனால், யானை கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் கீழச்சொக்கம்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் 500க்கும் மேற்பட்ட வாழைமரங்கள், 200க்கும் மேறப்பட்ட தென்னை மரங்கள், மா, பலா மரங்களும் சேதம் அடைந்துள்ளன. விரைவில் யானைக் கூட்டத்தை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








