26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

காவல்துறையின் பிரச்னைகள் பேசிய ரைட்டர், டாணாக்காரன்


த.எழிலரசன்

இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாத, கண்டுகொள்ளப்படாத புதிய கதைக் களங்கள் அண்மைக் காலங்களில் அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக காவல்துறையிலுள்ள முரண்கள், சிக்கல்களை பேசும் திரைப்படங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன.

இதுவரை வந்த தமிழ் சினிமாக்கள் அனைத்தும் காவல் துறையிலுள்ள ஒரு அதிகாரியை ஹீரோவாகவோ காட்டும். அந்த அதிகாரியை மையப்படுத்தியே காட்சியமைப்புகளும் இருக்கும். சிவாஜியின் தங்கப்பதக்கம் தொடங்கி ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவை வெற்றிப்படங்களாகவும் மாறின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

என்றாலும் கூட இவை அனைத்தும் காவல் துறை அதிகாரிகளின் ஹீரோயிசத்தை மையமாக வைத்து சொல்லப்பட்ட கதைகள். ஹீரோ ஒரு நேர்மையான அதிகாரியாக, சாதிக்கும் எண்ணத்தோடு, அநீதிகளைக் கண்டு பொங்குபவராக பணிக்கு வருவார். அவருக்கு வில்லன்கள், காவல்துறை உயரதிகாரிகளிடம் இருந்து பிரச்னைகள் வரும், அதை எதிர்கொண்டு எப்படி வெற்றிபெறுகிறார் என்ற ஒற்றை வரியோடு இந்த கதைகள் அனைத்தும் பொருந்திப்போகும். இந்தப் படங்கள் யாவும் காவல் துறையில் உள்ள சிக்கல்களை, காவலர்களுக்கு நடக்கும் அநீதிகளை விரிவாக பேசாமல் கமர்ஷியலாக மட்டும் வந்துசென்றன.

அண்மைக் காலமாக வெளிவரும் திரைப்படங்கள் காவல் துறை ஹீரோயிசத்தை உடைத்து, உள்ளே இருக்கும் பிரச்சினைகளை பேசியுள்ளன.ரைட்டர்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் ரைட்டர். பணியின்போது காவலர்களுக்கு என்ன மாதிரியான நெருக்கடி, அழுத்தங்கள் ஏற்படுகிறது என்பதை விரிவாக பதிவு செய்திருந்தது. அதிகாரி சொல்லும் பணியை மறு வார்த்தை கூட சொல்லாமல் செய்ய வேண்டும், அப்படி செய்ய மறுத்தால் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் காட்டியது.

பொய் வழக்கு எவ்வாறு புனையப்படுகிறது, ஆதாரங்கள் சித்தரிப்பு, குற்றப்பத்திரிகை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் சொல்லியிருந்தது. மேலும், அப்பாவி இளைஞன் கைதுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என படம் காட்சிக்கு காட்சி காவல்துறையில் நிலவும் சமகால பிரச்சினைகளை எடுத்துவைத்தது.

டாணாக்காரன்

இதுபோலவே சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம். இதுவும் ரைட்டர் திரைப்படம் போலவே அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பினால் வரும் சிக்கல்களை கோடிட்டு காட்டியது. சீருடைப் பணியாளர் தேர்வில் வெற்றிபெற்று பயிற்சிக்கு வரும் இளைஞர்கள், அங்குள்ள பயிற்சி அலுவலர்களால் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், எப்படி பயிற்சியை முடிக்கிறார்கள் என்பதுதான் கதையும்.


படத்தின் இயக்குனர் தமிழ், காவல்துறையில் பணியாற்றியதால் அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தியுள்ளார். நேர்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிஸ்டத்தின் ஒரு அங்கமாகவே அனைவரும் இருக்க முடியும் என்பதை டாணாக்காரன் சொல்கிறது. எதுவும் கேள்விக் கேட்கக்கூடாது, உத்தரவுக்கு மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதை நோக்கி கேள்வி எழுப்புகிறது. முக்கியமாக 1982ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்ட காவலர்களுக்கான பயிற்சி மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து தொடங்கியதே…அது இப்போதுதான் பொதுவெளியில் பேசப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் முக்கியமான முடிவை சொல்லியுள்ளது. எந்த அணி வெற்றி பெற்றாலும் அதிகாரம் எடுக்கும் முடிவே இறுதியானது என்பது ஒரு எதார்த்தமான முடிவாக இருந்தது. இனி வரும் காலங்களில் காவல்துறை பயிற்சிப் பள்ளிகளில் நடைபெறும் அவலங்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும்.

இந்த இரண்டு திரைப்படங்களும் காவல் துறையினால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை சமரசமின்றி சொன்னவை. காவல்துறைக்குள்ளேயே நிகழும் ஏற்றத்தாழ்வுகளையும், அதிகார வர்க்க சிந்தனையை, காவல் நிலையத்திற்குள் நிலவும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக கூறியவை. காவல்துறையினர் என்றால் லஞ்சம் வாங்குவார்கள், கட்டப்பஞ்சாயத்து பேசி பணம் வாங்குவார்கள், மிரட்டுவார்கள் என்பதுதான் பொதுபுத்தியில் இருப்பவை.ஆனால் இவை காவல்துறையினர் படும் இன்னல்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தன.


நடுரோட்டில் கால்கடுக்க பல மணி நேரம் நிற்க வேண்டும், வார விடுமுறை கிடையாது, முறையான பணி நேரம் கிடையாது, உயரதிகாரி உத்தரவுக்கு மட்டுமே தலையசைக்க வேண்டும் என பல பிரச்சினைகளை சொன்னவை. ஹீரோயிசம் நிறைந்த திரைப்படங்கள் வெளிவந்தாலும் கூட, இதுபோன்ற திரைப்படங்கள் அதிகமாக வெளியாக வேண்டும். அவை சமூக மாற்றங்களுக்கான காலத்தின் தேவையும் கூட.

த.எழிலரசன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

கைதி விழுங்கிய செல்போன் – அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!

Syedibrahim

இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு- முதலமைச்சர்

G SaravanaKumar

2025 முதல் Windows 10 செயல்படாது! – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!