அதிமுக ஐடி விங் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “திருநெல்வேலியில் தந்தை மற்றும் மகன் நடுரோட்டில் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம், பொய்க்கால் குதிரை ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கச் செய்யும் ‘குதிரைப்பேர’ அரசியலில் காட்டும் அதீத அக்கறையையும் முனைப்பையும், மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




