பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தேர்தலின் போது, “ஆட்சிக்கு வந்த முதல் நாளே தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம்” என்று கூறிவிட்டு, நேற்று பணி நிரந்தரம் கோரி அமைதியான வழியில் போராடிய ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மீது, அடக்குமுறையை ஏவிய பித்தலாட்ட தவெக அரசை,
“பெண்களுக்கு பிரச்சினை என்றால் சும்மா இருக்க மாட்டேன்” என்று வீர வசனம் பேசி விட்டு, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை தாக்கி, குண்டுக்கட்டாக கைது செய்த மனிதாபிமானமற்ற தவெக அரசை,
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய செவிலியர்களை நேற்று காலை முதல் காத்திருக்க வைத்து, மாலை கடந்த நேரத்தில் பேச்சுவார்த்தை என்று ஏமாற்றி அழைத்துச் சென்று, மண்டபத்தில் அடைத்து வைத்த சதிகார தவெக அரசை, இனி எப்படி நம்புவது? “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என பொய்களில் புரளும் தவெக அரசு, தற்போது செவிலியர்களிடம் நவம்பர் 3 வரை அவகாசம் கேட்டு, இந்த பிரச்சினையை கிடப்பில் போட முயல்கிறதா?
எம்எல்ஏக்களுக்கு கார் கொடுப்பதிலும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதிலும் அதிவேகமாக செயல்படும் முதல்வர் விஜய் அவர்கள், அரசுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் மட்டும் ஏன் “Dead Slow” ஆக இருக்கிறார்”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




