முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்?: ஜெயக்குமார்

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை உள்ளிட்டோர் சந்தித்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகாரளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஈரோடு கிழக்கில் தினந்தோறும் அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியினர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. ஒட்டகத்தில் செல்கிறார்கள், வடை, பஜ்ஜி போண்டா சுடுகிறார்கள்.

வாக்கு சேகரிக்கும் போது ஒட்டகத்தில் செல்வது தவறு, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு புகாரளித்துள்ளோம். வாக்காளர்களை அங்கங்கு சாமியானா போட்டு அடைத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு ரூ 500, சிக்கன், மட்டன், கறி அளித்து வருகின்றனர். வாக்காளர்களின் மனம் ஒரே மனம் தான். ஆட்சி மீதான அதிருப்தியில் இரட்டை இலைக்கு வாக்களித்து ஆளுங்கட்சிக்கு சவுக்கடி கொடுப்பார்கள்.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை ரூ 35.64 கோடி ரூபாய் செய்துள்ளார். கொள்ளையடித்த பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். திருமங்கலம் பார்முலாவைவிட, ஈரோடு கிழக்கில் புது பார்முலாவை பின்பற்றுகின்றனர் என தெரிவித்தார்.

இதையடுத்து ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார் என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், முதலமைச்சரின் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில், பணம் செல்லும் வழியை அடைத்துவிடாதீர்கள், திமுகவினர் பணம் கொண்டு செல்வதை தடுக்காதீர்கள் என அதிகாரிகளிடம் சொல்லப்படுகிறது என குற்றம் சாட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒரே நாளில் 9 கொலை நடைபெறுகிறது. காவல்துறையினருக்கும், தனி மனிதனுக்கும் பாதுகாப்பில்லை எனவும் கூறினார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பின்னலாடை விலை 15 சதவீதம் உயர்வு

G SaravanaKumar

சீர்காழி மழைவெள்ளம்; முதலமைச்சர் நாளை நேரில் ஆய்வு

G SaravanaKumar

மீன் மழை, தவளை மழை… எப்படி நிகழ்கிறது இதெல்லாம்?

Lakshmanan