நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஆலோசிக்க இன்று (நவம்பர் 28) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இந்த முறை திமுக ஆதரவு அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் வெளியானது.
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.இது, 2024-ஆம் ஆண்டுமுதல் திமுக மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி!
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே Delimitation நடந்திடத் திமுக ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







