இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆங்கிலேயர்களின் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் வழங்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், தமிழ்நாட்டில் அரசியல் நோக்கத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவினரும் சம்பிரதாயமாக செங்கோலை பயன்படுத்துகின்றனர் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
Why does the Congress party hate Indian traditions and culture so much? A sacred Sengol was given to Pandit Nehru by a holy Saivite Mutt from Tamil Nadu to symbolize India’s freedom but it was banished to a museum as a ‘walking stick’.
— Amit Shah (@AmitShah) May 26, 2023
இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் சைவ மடத்தால் பண்டித நேருவுக்கு ஒரு புனிதமான செங்கோல் வழங்கப்பட்டதாகவும், அது காலப்போக்கில் வாக்கிங் ஸ்டிக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், புனித சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் போலி என்கிறதா என அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.