தமிழகம்

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விவசாய கடன்களை ரத்து செய்வது தேர்தலுக்காகவே என விமர்சித்தார். ஏழு தமிழர்கள் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

Advertisement:
SHARE

Related posts

அதிகரிக்கும் கொரோனா: பயிற்சி மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Halley karthi

’இது கஷ்டமான காலம்தான், அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல’: தமிழக முதல்வர்

Halley karthi

முதல்வரின் தனிச்செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

Halley karthi

Leave a Reply