ஆசிரியர் தேர்வு தமிழகம்

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், விவசாய கடன் ரத்து என்பதை தான் முன்னதாகவே அறிவித்ததாகவும், தற்போது அதைத் தான் முதலமைச்சர் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். யார் ஆளும் கட்சி, யார் எதிர்க்கட்சி என்பதே தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நெருங்கும் காரணத்தினால் தான் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். பதவிக்காக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது திமுக அல்ல என்றும் 25 ஆண்டு கட்சி பணிக்கு பிறகே சட்டமன்றத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

Jeba Arul Robinson

கருணாநிதியின் படத் திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்க உள்ளதாக தகவல்

Jeba Arul Robinson

வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீடு

Halley karthi

Leave a Reply