முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்தல் ஆணையத்தில் நாதக புகார் மனு அளித்தது ஏன்? – சீமான் விளக்கம்

தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இதனால், பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்தவெளி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் எங்கள் கையில் உள்ளது. திமுக, அதிமுக கைகளில் காசு மட்டுமே உள்ளது. வாக்காளர்களுக்கு கொலுசு, பட்டுப்புடவை, பணம், குக்கர் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டுவரும் நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தை நாம் தமிழர் கட்சி அணுகி, புகார் மனு அளித்தது.

இதையும் படியுங்கள் : ”இபிஎஸ்-க்கு போட்டி திமுக அல்ல; நானும் ஓபிஎஸ்-ம் தான்” – டிடிவி தினகரன் 

தேர்தல் விதிமீறல்கள் குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நாதக சார்பில் தலைமை நீதிபதியிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் தேர்தலில், விதிமீறல்கள் தொடர்ந்தால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை அன்புக்கு அன்பாகவும், வம்புக்கு வம்பாகவும் என்கிற அடிப்படையில் இருப்பதால், ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திப்போம். மக்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். திமுக, அதிமுக வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி பிரித்து விடும் என்று இரண்டு கட்சிகளும் அஞ்சும் அளவுக்கு, இரண்டு கட்சிகளும் பலவீனமாக உள்ளத? “ என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan

பேரன்புமும், பெரும் காதலும்: அப்பாக்களும் தமிழ் சினிமாவும்

Vandhana

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

G SaravanaKumar