அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி திமுக அல்ல, நானும் ஓ.பன்னீர்செல்வமும் தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் தேனியில் பங்களாமேடு பகுதியில்
பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவில் உரையாற்றிய டிடிவி தினகரன், “நான் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தாலும், ஜெயலலிதா என்னை அறிமுகப்படுத்தியது இந்த தேனி மாவட்டத்தில் தான். இங்கு வருவது என்றாலே எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தேனியில் ஏப்ரல் – மே மாதத்தில் தங்குவதற்கு வீடு பார்த்து வருகிறேன். அரசியலுக்காக அல்ல, தேனி மாவட்டத்தில் உள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்ப்பதற்காக.
நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று, மாபெரும் வெற்றி அடைந்தது தேனி தொகுதி தான். குறைந்த வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததும் தேனி தொகுதி தான். அரசியல் சதியால் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அந்த சதித் திட்டதை முறியடிக்க, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்வோம். எந்த கொம்பனாலும் நமது கட்சியை அசைக்க முடியாது.
இதையும் படியுங்கள் : ஓபிஎஸ் தாயார் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் டெண்டருக்காக வந்தவர்கள் அல்ல. நீங்கள் எல்லாம் தொண்டர்களாக வந்திருக்கிறீர்கள். எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்திற்கு துரோகம் மட்டுமே செய்து, இன்றைக்கு அதன் பொதுச்செயலாளர் பதவியை அடைந்திருப்பதை எம்ஜிஆரின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. ஜெயலலிதாவின் ஆன்மாவும் மன்னிக்காது.
இபிஎஸ்-க்கு தக்க பாடம் கற்பிக்கும் நாள் விரைவில் வரும். அதிமுகவினர் கடந்த 2021 தேர்தலில் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தார்கள். ஆட்சி அதிகாரம் இருந்தது. கூட்டணி பலம் இருந்தது. ஆனால் அதிமுகவால் ஆட்சிப் பொறுப்பை தக்க வைக்க முடியவில்லை.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் தொண்டர்களை பலவீனப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அவருக்கு போட்டி திமுக அல்ல. நானும், ஓ.பன்னீர்செல்வமும் தான். இரட்டை இலை சின்னத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்ற முடியாது. மக்களே
பிடுங்கி தூக்கி எறியப் போகிறார்கள். அப்போது நாம் மீட்டெடுப்போம்.
உண்மையான தொண்டர்கள் என்னோடு இருக்கின்ற வரை இந்த இயக்கம் இரண்டில் ஒன்று பார்த்து விடும். ஜெயலலிதாவின் ஆட்சியை, உண்மையான ஆட்சியை, தமிழ்நாட்டில் கொண்டுவரப் போகின்ற இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை நாம் நிரூபித்து காட்டுவோம்” என்று பேசினார்.