சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடக்க உள்ள இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் சேப்பாக்கம் சிதம்பரம் மைதனத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளன. இதுவரை இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் களம் கண்டுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இதற்கு முன் கொல்கத்தா அணியுடன் விளையாடிய ஆட்டத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் ஹைதராபாத் அணி இதற்கு முன் விளையாடிய இரு ஆட்டத்திலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, கிரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா போன்ற முக்கிய வீரர்கள் களம் காண்கின்றனர். அதே சமயம் எதிரணியான ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய ஷங்கர், ஜான்னி பேர்ட்ஷோ, புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்களும் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இரு அணிகள் மத்தியில் யார் வெல்வார்கள் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் மேலோங்கியுள்ளது.
ஹைதராபாத் அணி கடந்த இரண்டு ஆட்டத்திலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளதால் அணியின் கேப்டன் மீதான அழுத்தம் வெற்றிக்கான கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றிப்பெறுவா் என்பது ஆட்டத்தின் இறுதியிலேயே தெரியவரும். மேலும் நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி தனது 200வது ஐபிஎல் தொடரில் கால்பதித்து வெற்றியையும் பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







