உலக வெப்ப நிலை நான்கு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் அண்டார்டிகாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பனிப் படலங்கள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து ‘Geophysical Research Letters journal’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உலக வெப்பமடைதல் காரணமாக அண்டார்டிக்வில் 67 % பனிப் படலங்கள் உருகும் அபாயத்தில் உள்ளது. அங்கு 34 % பனிப் படலங்கள் வெறும் அரை கிலோ சதுர பரப்பளவு கொண்டுள்ளது. பனிப் படல்கள் உருகியதே இதற்கு காரணம்.

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப் படலங்களான ‘ Larsen C, Shackleton, Pine Island and Wilkins ice shelves’ ஆகியவை ஏற்கனவே உருகிவரும் நிலையில் உலக வெப்ப நிலை நான்கு டிகிரி செல்சியஸ்க்கு அதிகாரித்தால் இந்த பனிப் படலங்கள் விரைவாக உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அண்டார்டிகாவில் 160 பில்லியன் டன் பனிப் படலங்களை இழந்துவருகிறது. அண்டார்டிகாவில் உள்ள மொத்த பனிப் படலங்களும் உருகினால் உலக கடல் மட்டத்தின் அளவு ஒரு மீட்டருக்கு அதிகமாக உயரும் என நாசா ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.







