ஐபிஎல் 2023 மகுடம் யாருக்கு?? – அனல்பறக்கும் ஆட்டம் ஆரம்பம்… சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் , குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் , குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வோரு அணியும் மற்ற அணிகளுடன் முட்டி மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

அதன்படி முதலாவது குவாலிஃபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்ததாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது.

கடந்த மே 26 ஆம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 2-ல் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில், ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??

அதன்படி இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில், இரவு 11 மணி வரை மழை பெய்ததால், இன்றைக்கு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 7.30 மணிக்கு தொடங்கவுள்ள ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.