மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களை பிடிக்கும் – ராகுல் காந்தி நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களை பிடிக்கும் என  ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இன்னும் நான்கு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத மாநிலத்தை தற்போது…

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களை பிடிக்கும் என  ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இன்னும் நான்கு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத மாநிலத்தை தற்போது ஆட்சி செய்து வரும் பாஜக உட்பட பல கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்கள் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது நடைபெற உள்ள தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி ”காங்கிரஸ் கட்சி கர்நாடத்தில் 136 இடங்களை பிடித்தோம். அதேபோல மத்திய பிரதேசத்தில் 150 இடங்களை பிடிக்கும்’ என தெரிவித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான கமல்நாத் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் பேசிய கமல்நாத் “ மத்திய பிரதேசத்தின் எதிர்காலம், முக்கிய பிரச்சினைகள் , சட்டமன்ற தேர்தலின் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி 150 பிடிக்கும் என தெரிவித்த நிலையில் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் பாஜக 200 இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.