மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் யார்? யார்?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தொடர்ந்து, என்டிஏ கூட்டணியை சேர்ந்த தலைவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான…

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தொடர்ந்து, என்டிஏ கூட்டணியை சேர்ந்த தலைவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அஃபிப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தனர்.

இதேபோன்று மருத்துவம், சினிமா, தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் விழாவுக்கு வருகை தந்துள்ளனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நடிகர் ஷாருக்கான் அடுத்தடுத்து ஒன்றாக பதவியேற்பு விழாவுக்கு வருகை புரிந்தனர். இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், நாகேந்திர பாபு, ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோரும் வருகை புரிந்தனர்.

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதின் கட்கரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயசங்கர், நிர்மலா சீதாராமன், திருசூர் எம்பியும் கேரளா நடிகருமான சுரேஷ்கோபி ஆகியோர் விழா மேடைக்கு வருகை தந்தனர். அதேபோல், டிடிவி தினகரன் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த தலைவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

  • பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை.
  • மத்திய அமைச்சராக பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக நிதின் கட்காரி பதவியேற்றார்.
  • பாஜக தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் 3வது முறையாக மத்திய அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்.

Image

  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் ஜெய்சங்கர்.
  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் மனோகர் லால் கட்டார்.
  • முன்னாள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
  • முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் ஒடிசாவைச் சேர்ந்த ஓரம் ஜூவல்.
  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் கிரி ராஜ் சிங்.

Image

  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் அஸ்வினி வைஷ்ணவ்.
  • மத்திய அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக பூபேந்தர் யாதவ் பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக ஜார்கண்ட் மாநில பாஜக எம்பியான அன்னபூர்ணா தேவி பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக ஹர்தீப் சிங் புரி பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் கிரண் ரிஜிஜூ.
  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் கிஷன் ரெட்டி.
  • லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

May be an image of 1 person and text that says "S NEWS NEWS7 7 AMI. 09 JUN 24 டெல்லி மோடி 3.0 மத்திய அமைச்சராக பதவியேற்றார் ஹர்தீப் சிங் புரி www.news7tamil.live"

  • மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
  • ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
  • ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலன் சிங் மத்திய அமைச்சரானார்.
  • லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
  • தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகம் நாயுடு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் அர்ஜுன்ராம் மேக்வால்.
  • ஜிதேந்திர சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
  • மத்திய அமைச்சராக பதவியேற்றார் சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் யாதவ்.

May be an image of 3 people and text that says "5 NEWS NEWS7 7 TAMI. 09 JUN 24 டெல்லி மோடி 3.0 Kealra மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற வீரேந்திர குமார் பிரகலாத் ஜோஷி, ஓடிசாவைச் சேர்ந்த ஓரம் ஜூவல் www.news7tamil.live"

  • ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி மத்திய அமைச்சராக பதவியேற்றார். 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.