இருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் ஆபத்து: WHO எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசிகளை மாற்றிப் போடுவதால் ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், ஆஸ்ட்ராஜெனகா…

கொரோனா தடுப்பூசிகளை மாற்றிப் போடுவதால் ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திய பின் 2வது டோஸாக பைசர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டால் கூடுதல் செயல்திறன் கிடைப்பதாக கூறப்பட்டது. இதனை அந்நாட்டு அரசுகளும் அங்கீகரித்தன.

தாய்லாந்து போன்ற சில ஆசிய நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே 2 தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது.

ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த 2 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல என உலக சுகாதார நிறுவன அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தற்போதைய குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது ஆபத்தை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.