முக்கியச் செய்திகள் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு நடால், செரீனா வில்லியம்ஸ், டொமினிக் தீம் உள்ளிட்ட பல்வேறு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவது இல்லை என அறிவித்துள்ளார். விம்பிள்டன் டென்னிஸில் காலிறுதியில் வெளியேறிய ரோஜர் பெடரர், பிரெஞ்ச் ஓபன் தொடரிலும் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு போட்டிகளில் அவர் கலந்துகொள்ளாதநிலையில், தற்போது ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், விம்பிள்டன் தொடரின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவதாகவும், இது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறியுள்ளார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான பெடரர், ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவு டென்னிஸில் இதுவரை பதக்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது “திருச்சிற்றம்பலம்” டிரைலர் – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

Dinesh A

தமிழகத்தில் “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் அதிகரிப்பு- மத்திய அமைச்சர் தகவல்

G SaravanaKumar

உயிரி தொழில்நுட்பத் துறையில் 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி: பிரதமர் மோடி

Mohan Dass