“ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி!

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். காவிரிக்காக சட்டப் போராட்டம் நடத்தி காவிரி நீர் காண தீர்ப்பை பெற்றது அதிமுக அரசு.

மேகதாது அணை கட்டுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கரூரில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை குதிரை பேரரத்தில் கட்சியில் சேர்த்துள்ளனர். அதிமுக எம்எல்ஏகளை திருடும் முதல்வர் விஜய் தான் களவாணி.

சிங்கப்பெண் திட்டம் ஒரு ஷோ, கரூரில் முதல்வர் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேசவில்லை. பஞ்ச் டயலாக்கை மட்டும் பேசுகிறார். நான்கு கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜயின் நாற்காலியில் ஒருக்கால் இரவல் கால். திமுக, அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை. திமுக தீய சக்தி என்பது எனது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.