INDvsENG: முதல் ஒருநாள் போட்டி – இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி 20 தொடரை 4 – 0 என்கிற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டிகள் இன்று தொடங்குகிறது. அதன் படி முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.

அணி விவரம்:

இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில்(கேப்டன்)), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், குர்னூர் பிரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து அணி: ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், ஜோஷ் டங், அடில் ரஷித்.

டி 20 தொடரில் இந்தியா அடைந்த படுதோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் ஒரு நாள் போட்டிகளில் கோலி, ரோகித் மற்றும் பும்ரா ஆகியோர் வரவால் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று விளையாட உள்ளார். அவர் கடைசியாக 2023 நவ.19-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். அவர் கிட்டத்தட்ட 968 நாட்களுக்கு பிறகு இன்று களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.