2-வது ஒருநாள் போட்டி : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

இந்தியா: ரோகித்சர்மா, சுப்மன் கில் (கேப்டன்) அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே, குர்னூர் பிரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து: பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் கர்ரன்,வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டாங்கு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.