சென்னை வானிலை மையமானது சுமார் 5.8 கிமீ உயரத்தில் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிவரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை, திண்டுக்கல், கன்னியாக்குமரி, தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.




