ஐபிஎல் 2026 தொடரில் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎலுக்காக அணியை சீரமைக்கும் பணியில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த பரிமாற்றத்தில் ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படி டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் ரூ. 15 கோடிக்கும் லக்னோ அணிக்கு குல்தீப் யாதவ் ரூ. 13.5 கோடிக்கும் அணி மாறுகின்றனர்.
ரிஷப் பண்ட்
ஐபிஎலில் கடந்த 2024 ஆண்டு டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பண்டை லக்னோ அணி 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டார்.
லக்னோ அணியில் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக சோபிக்க தவறினார். அதிலும் இந்த ஆண்டு ஐபிஎலில் லக்னோ அணி 14 ஆட்டங்களில் 4 வெற்றிகளும் 10 தோல்விகளும் பெற்றதால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ் 2022-ல் டெல்லி அணியில் சேர்ந்தார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் நடப்பு தொடரில் 12 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவரின் எகானமி 10.29 ஆகும்.




