இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, தர்மபுரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், தேனி, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.