இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நேற்று மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும் என்று  வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில்  14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, தேனி, திருநெல்வேலி, சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.