காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ் நாட்டில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை நேற்று (ஜூன் 4) தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழ் நாட்டின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி கோவை, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.