ராகுல் காந்தி, விஜய்க்கு நன்றி தெரிவித்த பிரவீன் சக்கரவர்த்தி…!

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு பிரவீன் சக்கரவர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களாவை இடத்திற்கு ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தவெக வெற்றி பெற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினார். தொடர்ந்து மாநிலங்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு பிரவீன் சக்கரவர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவி “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.