கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 131வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாசா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (IUML) தேசியத் தலைவர்கே. எம். காதர் மொகிதீன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.




