உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்று ஜப்பான். இந்த நாடு பசிபிக் ‘நெருப்பு வளையத்தின்’ மேற்கு விளிம்பில் உள்ள நான்கு முக்கிய புவித்தட்டுக்களின் மீது அமைந்துள்ளது இதற்கு காரணமாகும்.
இந்த நிலையில் தெற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1- ஆக பதிவாகியுள்ளதாகவும் இதன் மையப்புள்ளி கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் குறித்து ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் நிலநடுக்கத்தால், அரியாகே வளைகுடா மற்றும் யட்சுஷிரோ கடலுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தயவுசெய்து கடற்கரையை நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும் என் எச்சரித்துள்ளார்.
அதே போல சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், சேத நிலவரத்தை அவசரமாகக் கையாளவும், உயிர்காத்தல் மற்றும் மீட்பு போன்ற அவசரகால பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் முழு அரசும் முழுமையாக ஈடுபடவும், சுனாமிகள் மற்றும் சேதங்கள் போன்றவை குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் துல்லியமாக வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.




