டோவினோ தாமஸின் #ARM ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

டோவினோ தாமஸ் நடித்த ‘ஏ.ஆர்.எம்’ திரைப்படம் நவ.8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின்…

டோவினோ தாமஸ் நடித்த ‘ஏ.ஆர்.எம்’ திரைப்படம் நவ.8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ARM) திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜித்தின் லால் இயக்கினார்.

இப்படத்தில் குஞ்சிக்கெழு, மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் டோவினோ தாமஸ் நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் நடத்தைகளுடன் சித்தரிக்கப்பட்டிருந்தன. அவரது அழுத்தமான திரை ஈர்ப்பு மற்றும் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. குறிப்பாக அவரது உணர்ச்சிகரமான நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. மேலும், இதில் பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலித்தது. இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், ‘ஏஆர்எம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவ.8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.