Skip to content
January 03, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » whatsapp update new facility to keep dp
முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம் செய்திகள்

“Whatsapp Update” – DP வைக்க புதிய வசதி!

வாட்ஸ்-ஆப் செயலியில் Display Picture (DP) வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம்…

Author Avatar

Web Editor

November 2, 20231:37 pm DPMark ZuckerbergNews7Tamilnews7TamilUpdatesProfile PictureTwo Accountupdatewhatsapp

வாட்ஸ்-ஆப் செயலியில் Display Picture (DP) வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப்க்கு பயனர்களாக உள்ளார்கள். இந்த வாட்ஸ் ஆப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. அதே போல் ‘லாக் சாட்’ என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

சமீபத்தில் வாட்ஸ்-ஆப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றத்தை அறிமுகம் செய்தது. 

இதன் மூலம், ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களிலும், வாட்ஸ்ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்கள் ப்ரோஃபைல் போட்டோ வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு தன்முகப்பு படமும், இல்லாதவர்களுக்கு மாற்று தன்முகப்பு படத்தையும் வைத்துக் கொள்ளலாம். பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஓர் அரணாக இந்த வசதி பார்க்கப்படும் என வாட்ஸ்ஆப் பீட்டாஇன்ஃபோ என்கிற இணையதளம் தெரிவிக்கிறது.

மேலும், வாட்ஸ்ஆப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது. தற்போது மொபைல் எண் மட்டுமே வாட்ஸ் அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

“அரசு மருத்துவமனைகளையும் குடிப்பகங்களாக்கியதே திமுகவின் சாதனை” – அன்புமணி கண்டனம்!

By Web Editor January 3, 2026

Gold Rate | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

By Web Editor January 3, 2026

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்த நாள் – பிரதமர் மோடி புகழாரம்!

By Web Editor January 3, 2026

மெக்சிகோ : 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

By Web Editor January 3, 2026
#ट्रेंडिंग हैशटैग:DPMark ZuckerbergNews7Tamilnews7TamilUpdatesProfile PictureTwo Accountupdatewhatsapp

Post navigation

Previous Previous post: ஷாருக்கானுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த ‘Dunki’ படக்குழு!
Next Next post: தமிழ்நாடு மட்டுமல்ல…இந்தியாவைக் காப்பாற்றும் கடமையையும் திமுக தன் தோள்களில் சுமந்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading