ஷாருக்கானுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த ‘Dunki’ படக்குழு!

ஷாருக்கானுக்கு பிறந்த நாள் ட்ரீட்டாக அவர் நடித்துள்ள ‘Dunki’ திரைப்படத்தின் டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.  ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து…

ஷாருக்கானுக்கு பிறந்த நாள் ட்ரீட்டாக அவர் நடித்துள்ள ‘Dunki’ திரைப்படத்தின் டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ‘Dunki’. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததால், ‘Dunki’ மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்மையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம்,  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘Dunki’ திரைப்படம் வெளியாக உள்ளது.  ஷாருக்கான் இருக்கும் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையும் படியுங்கள் : ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்… அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்..?

இந்நிலையில் இன்று ‘DunkiDrop1’ என்ற பெயரில் டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹார்டி என்ற கதாபாத்திரத்தில் ஷாருக்கானும், மனு என்ற கதாபாத்திரத்தில் டாப்சியும் படத்தில் நடிக்கின்றனர். ஆக்‌ஷன், நகைச்சுவை என எண்டர்டெயின்மென்ட் நிறைந்த படமாக ‘Dunki’ இருக்கும் என்பது வெளியான டீசரின் மூலம் தெரிய வருகிறது. விரைவில் ‘DunkiDrop2’ வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.