பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம் வழங்கியது வாட்ஸ் அப்!

வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகள் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதிக்குப் பின்னரும் தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் செயலியில் பயனர்களுக்கான தனியுரிமைக் கொள்கைகளில் புதிதாக பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.…

வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகள் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதிக்குப் பின்னரும் தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் செயலியில் பயனர்களுக்கான தனியுரிமைக் கொள்கைகளில் புதிதாக பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் இந்த தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத பயனர்களின் கணக்குகள் அழிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் வாட்ஸ் அப்பின் பிரைவசி பாலிசியும் பயனர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதனால், உலகம் முழுவதும் வேறு செயலிக்கு பலர் மாறினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த வாட்ஸ் அப் நிறுவனம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கைகளை பொதுமக்கள் புரிந்து கொள்வதற்கு மே மாதம் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. எனவே வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வாட்ஸ் அப் தகவல்கள் அழிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வாடிக்கையாளர்கள் பகிரும் தகவல்களை உளவு பார்க்கவும் மாட்டோம் என்றும் வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply