கொரோனா தடுப்பூசி: விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 3 ஆயிரத்து 6 முகாம்களாக பிரிக்கப்பட்டுள்ளன.…

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 3 ஆயிரத்து 6 முகாம்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே போடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட தடுப்பூசிதான் இரண்டாவது டோஸிலும் போடப்படப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. முதல் டோஸில் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும், இரண்டாவது டோஸில் வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியையும் ஒருவருக்குப் போடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஒவ்வாமை உள்ள நபர்கள், உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, அலர்ஜி உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு 4 முதல் 8 வாரங்கள் கழித்து தான் தடுப்பூசிபோட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிளாஸ்மா தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் அல்லது வேறு நோய்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் அவர்கள் குணம் அடைந்ததில் இருந்து 4 முதல் 8 வாரங்கள் கழித்து தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply