பிளஸ் 2 மாணவர் தனியார் நிறுவனம் தொடங்கி இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்டு உலக சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த குருமூர்த்தி, செல்வி ஆகியோரின் மகன் பிரகதீஷ். மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படித்த போதிருந்தே ஹாக்கிங் மற்றும் சைபர் வெப்சைட் பற்றி பயின்று வந்த பிரகதீஷ், 30 தனியார் நிறுவனங்களின் இணைய தளம் மற்றும் சர்வர் தகவல்களை வேறு யாரும் திருடாமல் பாதுகாத்து அறிக்கை அளித்து வருகிறார்.
இவருடைய நிறுவனத்தில் தற்போது 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 26க்கும் மேற்பட்ட சைபர் செல் தேர்வுகள் எழுதி சான்றிதழ் பெற்றுள்ளார். இதனை இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்டு என்ற உலக சாதனையாளர் குழு அங்கீகரித்து உலக சாதனை விருது கொடுத்துள்ளது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை மற்றும் காவல்துறையினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.







