அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம்! – மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், இன்னும் 3 மாதங்களில் திமுக அரசு அமையும் என்றார்.

மேலும், திமுக அரசு, கொள்கை அரசாகவும், மக்களுக்கு சேவை செய்யும் அரசாகவும் அமையும் என்றும் கூறினார். அதிமுக ஆட்சியில் பொதுபிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டிய ஸ்டாலின், பொதுமக்களுக்கு அச்சத்தை தர கூடிய அரசாக அதிமுக அரசு அமைந்துவிட்டதாகவும் விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply