இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டம்?

இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தீவிரம்…

இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாத இறுதிக்குள் கூட்டணியை உறுதி செய்வதுடன் தொகுதி உடன்பாட்டை முடிக்கவும் திட்டமிட்டு அதிமுக பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. வரும் மார்ச் 2ம் தேதி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த அறிவிப்பை வெளியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply