U/A சான்றிதழ் படத்திற்கு சிறுவர்களுடன் வந்ததால் அனுமதி மறுத்ததாக ரோகிணி திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ள நிலையில், U/A சான்றிதழ் என்றால் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
சினிமாட்டோகிராபி சட்டம் 1952-ன் படி மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி,
U என்றால் தடையற்ற பொது கண்காட்சி. இந்த படத்தை அனைத்து வயதினரும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படியுங்கள் : நல்லது செய்ய வேண்டும் என்றால் கூட ஒரு கெட்ட முகம் தேவைப்படுகிறது – பத்து தல விமர்சனம்
படங்களில் ஆபாச வார்த்தைகள், ரத்தம், ஆபாச காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றிந்தால் A சான்றிதழ் வழங்கப்படும். A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
1983-ம் ஆண்டு முதல் U/A மற்றும் S சான்றிதழ் புதிதாக கொண்டுவரப்பட்டன.
U/A சான்றிதழ் பெற்ற படங்களில் ஆபாச வார்த்தைகள், ரத்த காட்சிகள், ஆபாச காட்சிகள் குறைந்த அளவில் இடம்பெற்றிருக்கும். அதனால் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி, பெற்றோர் அனுமதி உடன் படம் பார்க்க அனுமதிக்கப்படுவர்.
S சான்றிதழ் என்றால் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் போன்ற சிறப்பு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழக்கப்படும்.







