கொரிய சுற்றுலாப் பயணி ஒருவர் தன் வாழ்நாளில் முதல் முறையாக பானி பூரியை ருசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பானி பூரியைப் புகழ்ந்து பாட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்தியாவில் இது மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். எப்போது சாப்பிட்டாலும் சிவையாக இருக்கக் கூடிய இந்த சிற்றுண்டியைக் கொரியாவைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பாணி பூரியை தன் வாழ்வில் முதல் முறையாகச் சுவைக்கிறார். அவரின் இந்த முதல் முயற்சி அவர்க்கு திருப்தி அளித்ததா இல்லையா என்பத்தை இந்த வீடியோ சித்தரிக்கிறது.
வீடியோவில் ஒரு கொரிய மனிதர் பானி பூரியை ருசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதைத் தொடர்ந்து அவரது உற்சாகமும் மேலும் முயற்சி செய்ய ஆசையும் அவருக்கு இருப்பதை நம்மால் காண முடிகிறது. சிற்றுண்டியின் இனிப்பு, கசப்பான மற்றும் காரமான சுவைகள் அவரது ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும் அவர் புதிய மற்றும் சுவாரஸ்யமான உணவுகளை முயல்வதற்கான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
https://www.instagram.com/reel/CqPx1a3rIQu/?utm_source=ig_web_copy_link
புதிய மற்றும் உற்சாகமான ஒன்றை முயல்கிறேன் – ஸ்ட்ரீட் பானி பூரி! உங்களுக்குப் பிடித்த இந்திய தெரு உணவு உள்ளதா? கீழே உள்ள கருத்துகளில் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் அதை முயல்கிறேன் என வீடியோவின் தலைப்பில் எழுதியிருக்கிறார்.







