தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் 21,333 பேருந்துகள் 10,172-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவையினை தினசரி 2.18 கோடி மக்கள் பயன்பெறும்வகையில் வழங்கி வருகின்றது. இதில் 72% பயணிகள்கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு இன்றியமையததாகும். போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு, 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (02.11.2026) வழங்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




