அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வகிக்கும் பொறுப்பு என்ன? – ஓபிஎஸ் தரப்பு கேள்வி

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சியில் வகிக்கும் பொறுப்பு என்ன என்று ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சியில் வகிக்கும் பொறுப்பு என்ன என்று ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளடக்கிய பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நேற்று கடிதம் மற்றும் படிவங்களை அனுப்பினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் அதிமுக வேட்பாளர் தேர்வு படிவத்தையும் அவர் அனுப்பியுள்ளார். இன்று இரவு 7 மணிக்குள் பதில் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அந்த கடிதத்தில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பதவி குறித்து எதுவும் இல்லாததால், அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.