கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
கொசுக்களால் பரவும் நோய்கள்:
- கொசுக்கள் கடிக்கும்போது வெளியாகும் உமிழ்நீர் தோலில் அரிப்பையும் தடிப்பையும் ஏற்படுத்தும்.
- டெங்கு, சிக்குன்குனியா, புளூ காய்ச்சல் போன்றவை கொசுவால் பரவும்.
- ஒட்டுண்ணியையும் கொசு பரப்புவதால், மலேரியா பாதிப்பும் ஏற்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் மலேரியா பாதிப்புக்கு சுமார் 4 லட்சம் இந்தியர்கள் பலி.
- மஞ்சள் காய்ச்சல், ஜிகா வைரஸ், மூளை அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும்.
- கொசு வகைகள் கால்கள் வீக்கத்திற்கு வழிவகுத்து யானைக்கால் நோயை உருவாக்கும்.
- நிணநீர் ஃபைலேரியாசிஸின் அறிகுறிகள் கொசுக்கடியால் ஏற்படும்.
- கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படும் 5 மாநிலங்களில் நான்கு தென்னிந்தியாவை சேர்ந்தவை.
- தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் கொசு பரவும் நோயால் பாதிப்பு அதிகரிப்பு.
- ஆண்டுதோறும் சுமார் 70 கோடி மக்கள், கொசுவால் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்.
- கொசு பரப்பும் நோயால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் உயிரிழப்பு.
- தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு டெங்கு நோய் தீவிரமாகத் தாக்கியது.
- 2017-ம் ஆண்டு 4 மாதங்களில் 10,488 பேர் தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிப்பு.
- 2017-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பலி.
- தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டில் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- டெங்குவால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களில் பள்ளிக்குழந்தைகளே அதிகம்.
- நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கும் கொசுக்கள் பல நோய்களை உருவாக்கிறது.
- பி. ஜேம்ஸ் லிசா







